Sunday 30 April 2017

2(1)


 ◆◆◆◆ மயக்குது உன் மதி முகமே...!!!◆◆◆◆


யாருக்கும் இப்படி தன் மனைவியின் லவ் பற்றி கேட்கும் நிலை வரக்கூடாது....அனாந்திரமான நிலை .....

மனதின் மையத்தில் ஜோஸ் க்கு வலித்தது....

அவன் அம்மா அவனை வேண்டும் என்றே மட்டம் தட்டி சொன்ன காக்கா குஞ்சு  அளவுக்கு அவன் இல்லை......

கருப்பாய் இருந்தாலும் ,நல்லா களையாய்,கவர்ச்சியான முக அமைப்பு கொண்டவன்....படிப்பு தந்த தன்னம்பிக்கையில் நிமிர்வுடனும், கம்பீரமான உடலமைப்போடும் , சென்னையில் பேர்பெற்ற நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கும்  சாப்ட்வேர் என்ஜினீயர்....எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன்....

fb கணக்கு கூட கிடையாதுன்னா பார்த்துகோங்களேன்....eeeee...

பெண்வீட்டாருக்கு திருப்தியான வரன்..

இவனுக்கு இதுவரை லவ் பத்திலாம் எந்த  எண்ணங்களும் கிடையாது.....ஒன்றிரண்டு பெண்கள் இவனின் ஆளுமையில் கவரப்பட்டு பேச விழைந்தாலும்....தெரியாத மாதிரியே தாண்டி சென்றுவிட்டான்....எதுக்கு வம்பு...தும்புபெல்லாம்....

என் அம்மாக்கு பிடிச்ச பொண்ணு தான் என் மனைவி....

தவமாய் இருந்தவன்...அவன்....

தனியே ரூம் எடுத்து தங்கி ஆபீஸில் , வெளியில்  என்று சாப்பிட்டு ஒரு வகையாய் சென்னையில் காலந்தள்ளி கொண்டறிந்தவனை.....


இவன் ஊர்....கன்னியாகுமரி பக்கம்...ஓர் அழகிய கடற்கரை கிராமம்....சந்தடிகள் கொஞ்சமாய்...சுற்றிலும் உறவுகளைக் கொண்ட சொர்க்கம்.... சென்னைக்கு வராத அம்மா ...சொந்தக்காரங்க விஷேஷத்திற்கு வந்தவர்....இவனின் சாத்தியமில்லாத வாழ்க்கை முறையை கண்டவர்.....

கல்யாணம் பண்ணிக்கோ ஜோஷு....நம்மூர் பக்கமே பாக்கவா?? இல்ல.....இங்கேயே வேல பாக்குற மாதிரி பாக்கவா???

என்றார் அதிரடியாய்....

ஏம்மா விளையாடுறீங்களா???உங்களுக்கேநல்லா தெரியும்... ஜூலி க்கு கல்யாணத்துக்கு வாங்கின கடனே இருக்கு....அப்புறம் பிள்ளைகளுக்கு செஞ்சது....கிட்ட நெருங்கட்டும்....சொல்றேன்....ஸ்டெடி ஆகிட்டு.....இப்ப வேணாம்.....கொஞ்சம் கண்டிப்புடனே சொன்னான்.....

அதெல்லாம் நம்ம ஆட்களுக்கு கடல் அலை போல தான் கடனும்...ஓயாது மோனே....நீ சுகமா இரு அது போதும்....

எப்படி பாக்க சொல்லு...

இவன் சம்மதமின்றி....அமைதியாய் இருக்க....

ஏடேய்....உடனே ஆகிருமா என்ன??..எப்படியும் நாள் தள்ளும் டே....

ஆமாம் ....சரிதான்...தோண....

சரி பாருங்க....உங்களுக்கு பிடிச்ச மாதிரி....போதும் ம்மா...

அன்னைக்கு தொடங்குச்சி ஜோஷனுடய...கிரகம்....

அவ்ளோதான்...

ஒவொரு பெண் விபரமும்....fb நியூஸ் பீட் மாதிரி....தினமும் இவன் வாட்சாப்  தவறாமல்...வர...ஜூலி ஆனந்தி தங்கையின் உபயம்....

முதலில் ஆர்வமாய் பார்க்க ஆரம்பித்தவன்....பிற்பாடு...எரிச்சலானான்....

அப்பப்பா.... எத்தனை வாய்ப்புக்கள்....வேண்டாம் சொல்ல...

பார்த்தா பச்சக்குன்னு ஒட்டனும்....அப்படி ஒரு பொண்ணுமே இல்லாதது தான் இவனுக்கு ஆச்சரியம்....

கோளாறு யாரிடம் ?????

"லவ் தான் பெஸ்ட் ஓ..." மண்டை காய்ந்தான்....

எதோ நமக்கு வாய்ச்சது அவ்ளோ தான் என்று இவன் ஓகே பண்ணும் போது....ஐயோ கொடுமையே ....

அங்கு இவனை வேண்டாம் என்று தள்ள...

பரமபதம் போலானது....ஜோஷன் நிலை....

மன உளைச்சல் தான் வந்தது....தானா  விட்டது சனி....மகிழ முடியவில்லை....

முதன் முதலாக தன் தோற்றம் குறித்து கவலை வந்தது....

உண்மையில் மண்ணுக்குரிய அழகனே!!!

தேவை இல்லாத கற்பனை ....

ஆனால் உண்மையே தானோ???  தோற்ற மயக்கம் மலைக்க வைத்தது...

அம்மாவிடம்...ஒரு நாள் சந்தேகம் கேட்க....

உனக்குன்னு  இனிமேலா பொறக்க போறா தேடுவோம் மோனே....அம்மா இருக்கேன்....எல்லாத்துக்கும் மேல ஏசப்பா இருக்காரு.....விசனப்படாத....உன் வேலைய மட்டும் பாரு....என்று விட்டார்....

அம்மாவே தள்ளுபடி செய்கிறாரோ ??? இல்லை

பொண்ணே கிடைக்கலியோ ???!

அதற்கப்புறம்  பெண்கள் போட்டோ அம்மா அனுப்பவில்லை....நிம்மதி வந்திருக்கணும்....

ஆனால் வெறுமை வந்தது.....கலக்கம் கூடியது....

பெண் தேடும் மாப்பிள்ளைகளுக்கு வரும் சீசன் காய்ச்சல் அது.....பாவம் ஜோஷனுக்கு அது நார்மல் தாண்டி ஹை க்கு போனது தான் ....சோ சேட்...

பாலைவன இரவில்  குளிர் நிலா போல்...

 அவன் ரூமில் இருந்த போது ....ஒரு போட்டோ....வர....

அவ்..அவ்...ன்னு அவன் ஆவலாய் வாட்ஸ் ஆப் திறக்க...

டேட்டா பிரச்சனையில் ....

நடுவில் பெருக்கல் குறி இட்டு பச்சை வட்டம் சுற்ற....மங்கலாய் உருவம்

பொறுமை இழந்து....அங்கிங்கு...டவர் கிடைக்க ஓடி....செல்லை ஆட்டி குலுக்கி....படிக்காதவர்கள் அறியாமையில் செய்வது போலவே செய்தான்..... இயல்பு மாறி....

பளீர் என்று தெரிந்த முகம்....

அவனை தன் ஆயிரம் கைகள் கொண்டு இழுத்து சென்றது....

பார்த்தான்....பார்த்தான்...பார்த்து கொண்டே இருந்தான்....

இவள் தான்...இவளே தான்....அவன் பெண்.....

அவ்வளவு ஒரு பிள்ளை போல் மகிழ்ச்சி அவனுக்கு....

அம்மான்னா அம்மா தான்.....பாசம் கொண்டான்....

உடனே அழைத்து...சொல்லிவிட்டான்....

ரொம்ப பிடிச்சிருக்கு....என்று....

மறந்தே போனான் அம்மாக்கு பிடிக்கணும் ன்னு .....

அப்படி ஒரு மதி மயக்கம் தந்தது...அந்த மதி முகம்....

அவளே ஜென்ஸி தாமஸ்....









No comments:

Post a Comment