Sunday 30 April 2017

2(2)

மயக்குது உன் மதி முகமே !!!!



"ஜெனி வீட்டில் சம்மதம் சொல்லிட்டாங்க ஜோஷ்..."

அம்மா சொன்னதும் "கண்டேன் சீதையை எபக்ட் " எனக்கு.....

"வர ஞாயிறு பூ வச்சி உறுதி பன்னிரலாம் பேசிட்டேன் ....வெள்ளியே வந்திரு...அன்னைக்கே அவங்க உன்ன பாத்துரலாம் ன்னு சொல்லியிருக்காங்க பா....

அப்பா,ஜூலி, ஜூலி மாப்பிள்ளை, மாமா லாம் போய் பார்த்துட்டு வந்தோம் டா....பொண்ணு சிலை மாதிரி இருக்கா....அப்படியே நம்ம ஊரு சந்தன மாதா மாதிரியே ....என் மருமக ன்னு சொன்னாலே அந்தஸ்தா இருக்குடா....அவங்க அப்பா மருந்து கடை வச்சிருக்காரு ......."

அம்மா சொல்ல சொல்ல தென்றல் போல் சுகமாய் இருக்க...


அவளைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தால் நாள் பூரா சோறு தண்ணி இல்லாமால் கேட்பவன் போல........

ஒரு வித சுகத்தில் காற்றில் தக்கையாய்  மிதந்தாற்போல் காதில் வாங்கி கொண்டிருந்தவன்....


செய்முறை பற்றி மரியம் சொல்ல விழைந்த பொது....


"ஏம்மா அசிங்கமா வரதட்சணைலாம் கேட்டீ ங்களா??? "அவசர அவசரமா கேட்க....

"இதோடா ...மோனே ஜோஷுஉனுக்கு இவ்ளோ பேராசை லாம் இருக்கக்கூடாது ...பொண்ணு தரதே பெருசு...நானே உனக்காக பிள்ளை ஆசை பட்டானே ன்னு....வட்டிக்காரியாட்டும் போய் போய்...மனச கரைச்சு...நிச்சயம் வரை கொண்டு வந்திருக்கிறேன்....

ஆளப்பாரு....நீ தான் அவளுக்கு கொடுக்கணும் டே.." கேலி பண்ணி சிரிக்க...

"சரி சரி தெரியாம சொல்லிட்டேன் ...." வழிந்துவிட்டு

வெள்ளி நைட் கிளம்பி....சனி வருவதாக... உறுதி சொல்லி...


செலவுக்கு பணதேவை கேட்டு அவனிடம் இருந்ததில்  அம்மாக்கு மாற்றி விட்டான்....

மகிழ்ச்சியாக....

ஊருக்கு வந்தப்ப அவன் கூட்டுபசங்க சொன்ன தகவல்கள்  அத்தனை சந்தோஷத்தையும் காவு வாங்க....

இந்த பொண்ணு வேண்டாம்...  முடிவுக்கு வந்தான்....

முன்னாடி காட்டிய பெண்களிடம் அழகு படிப்பு வயசு தான் வேறுபாடு வந்தது...இவளுக்கு எல்லாம் இருந்தும் ஒழுக்கம் இல்லாதது ... பெரிய குறையே!!!!



வேண்டாம்...இந்த பொண்ணு....அந்த மயக்கிய மதிமுகத்தை அறவே  வெறுத்தான்...


அம்மாவிடம் அதையே சொல்ல....நாளை நிச்சயத்துக்கு என்று ஓடி ஆடி கொண்டிருந்தவர்...

முதலில் சொன்ன காகா குஞ்சு என்று காமெடியா தொடங்கி....

எனக்கும் சொன்னாங்க....நல்ல  பொண்ணுடா....
அம்மா உனக்கு எப்பவும் நல்லது தான் செய்வேன் நம்பிக்கை வை....

ஏதாவது...முடியாது வேணாம்..எதாவது வித்தியாசமா நடந்துச்சு....கட்டினவன் சரி இல்லை....போகுது ....பிள்ளைகளை நல்லா பாத்துப்போம் ன்னு இருக்கேன்....ஜூலி பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமை முடிச்சிட்டேன்.....நீ சம்பாதிக்கிற....பெரிய ஆள் மாதிரி பேசுரா....உனக்கு நான் தேவையில்லை...அந்த பெரியதோட்ட கிணறு மூடாமதான் கிடக்கு.... பார்த்துக்க ஜோஷு....கடுமையாக முடித்துவிட்டார்....

அம்மா அப்படிதான்...
பூ போல எப்போதும் வாடாமல் சிரித்து கொண்டே எளிமையானவர்  அப்பாவி போல வெளியே தெரிந்தாலும்....வைராக்யமானவர்.....

ஒரு கருத்து சொன்னா கேக்கணும்...அத விட்டுட்டு.....கிளைமாக்ஸ் சீனையே முத சீனா வைக்கிறீங்க ....கடுப்பாக சொன்னவன்....இப்ப என்ன ஜெனிய கட்டிக்கணும்.... அவ்ளோதானே....

மரியம் முகத்தை உர்ர்ர் என்று வைத்திருக்க....

ஜெனி தான் என் மனைவி .....போதுமா அம்மா??

கசந்த மனதை விழுங்கி....

அம்மாக்கு என்ன தெரியும்...என் மனசை பத்தி...இத் தனை நாள் நல்லவனா இருந்ததுக்கு ...இது தானா பலன்....ஒருத்தன் கூட ஓடிப்போனவவளை ...மணப்பது....

நான் நாலு பெண்களை பழகி ஏமாத்தி அனுபவம் கிடைத்திருந்தால்....இவளின் நிலைக்கு சமமாய் இருக்கும்....
ஆனால் நான் நல்லவன்....எனக்கு ஏன்???



இதோ அவளுடன் முதல் நாள்..தனிமை...


எங்கேயோ வெறித்தபடி ....


"அழகா பிறப்பது ஒரு சாபம் ங்க..." சோகமாய் சொல்ல....


எல்லோருக்கும் காட்சி பொருளாய் ஆக்கிடு்து...

நின்னா நடந்தா பேசினா சிரிச்சா டிரஸ் பண்ணா பண்ணாம இருந்தா எல்லாத்துக்கும் விமர்சனம்....

என்கிட்ட என்ன எதிர் பார்கிறங்கன்னு தெரில...

அவள் தொடங்கிய போதே எனக்கு ஆவல் பிறந்தது......

மலை நல்லவன்....நான் 10 கிளாஸ் படிக்கும் போது அவன்+2...

விளாயாட்டுல லாம் அவன் தான் மாஸ்...செமையா பேய் மாதிரி போர்ஸ் யா இருப்பான்...ஸ்டேட் லெவல் ....பிளேயர்..கூட..

எங்க ஊர்லயே அவங்க தான் வசதி காரங்க....அவன் ராஜா வீட்டு கன்னுக்குட்டி ...அவ்ளோ நல்லா வேற இருப்பான்....நான் சைக்கிள் ல போவேன்....

ஒருநாள் ....என்சை க்கிள் நடு வழில பிரச்சனை பண்ணிருச்சு...... ஸ்கூல் க்கு போக முடியாம தள்ளிட்டு வந்துட்டு இருந்தேன்....

அவன் அன்னைக்கு உதவினான்...பேர் கேட்டான்...அவனை எங்க ஸ்கூல்ல எல்லோருக்கும் தெரியும் ...என்ன அவனுக்கு தெரியாது போல....

எனக்கு வருத்தமா இருந்தாலும்...என் கிட்ட பேசியதே அப்டியே
பெரிய vip கிட்ட பேசின பீல்....

பள்ளியில் என்னை தனியாக பார்க்க ஆரம்பிச்சப்ப..... நான் குயின் போல உணர்ந்தேன்....

எனக்காக மாஸ் கெல்லாம் வந்தான்....தனியாக நான் வரும் போதெல்லாம் அந்த இடங்களில் எனக்காக காத்திருப்பான்...

பேசுவோம் பேசுவோம் பேசுவோம்.....

நான் நூறு சொன்னால்...அவன் ஒரு ம்ம் சொல்லுவான்...

அவன் உயரமா ஒல்லியா முரடா இருப்பான்...நான் அப்ப குட்டியோண்டா பொம்மை மாதிரி இருப்பேன்...
ஆனால் அவன் நான் நில் என்றால் நிற்பான்...

எனக்கு பெருமை தாங்காது....

போடா என்றாலும் நாய் பேய் என்றாலும் அமைதியாய் புன்சிரிப்போடு என்னை வைத்த விழி வாங்காது பார்ப்பான் ...பார்ப்பான்...பார்த்துட்டே இருப்பான்...

அவள் கண்கள் கலங்கி .....கண்ணீர் விழவா? என்பது போல நிற்க....

எனக்கே மனசு பிசைந்தது....

நான் லவ் பண்ணதில்லை.... ஆனால் எதிராளியின் பீல என்னால் உணரமுடியம்...அல்லவா????

கன்று குட்டி காதல் தான் சிறந்த காதல் என்று உலகம் முழுதும் அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்....

கலப்படமில்லா அன்பு....அது....

எத்தன வருஷ லவ்????

மூன்றரை வருஷம்....

"வெறும் பேச்சு மட்டும் தானா????" வருத்தத்துடனே கேட்டான்....ஜோஷன்...

இதற்கு அவள் உண்மை சொன்னால்....ஹர்ட் ஆவது இவனுமே!!!!






No comments:

Post a Comment